முதல் டெஸ்ட் போட்டி; பேட்டர்களை கலங்கடித்த ரபாடா - தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 165 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 326 ரன்களும் எடுத்தன. 161 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென் ஆப்பிரிக்க பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து பேட்டர்கள் வந்தவேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 38வது ஓவரில் வெறும் 149 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பேட்டர்களை கலங்கடித்த ரபாடா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்