முதல் டி-20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸி. த்ரில் வெற்றி

x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு பந்து மீதமிருக்கையில், 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆஸ்திரேலியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்