முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் திரில் வெற்றி | ICC

x

இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது.

மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் மட்டும் 73 ரன்கள் சேர்த்தார்.

வங்கதேச வீரர் ஷாகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியும், இந்திய அணியின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இறுதியில் 46-வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், வங்கதேசம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்