கூட்டாளியை கொலை செய்துவிட்டு குறட்டை விட்டு தூக்கம் ..ஆடுகளுக்காக நடந்த துப்பாக்கி சூடு... கோவையில் பெரும் பதற்றம்

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. 58 வயதான இவர், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மேய்ச்சலின் போது இவரது இரண்டு ஆடுகள் வழி தவறி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த சின்னசாமி, அவரது கூட்டாளியான ரஞ்சித்துடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சின்னசாமி தனது ஆடுகள் காணாமல் போனதற்கு ரஞ்சித்தை குற்றஞ்சாட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ரஞ்சித், சின்னசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளர். அப்போது அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், இருவரையும் சமாதானப் படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். இருப்பினும் ரஞ்சித்திற்கு ஆத்திரம் அடங்கவில்லை.

போதையும், கோபமும் ஒரு சேர தலைக்கேறிய நிலையில், வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்த ரஞ்சித், சின்னசாமியை சுட்டுக்கொன்று, தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சின்னச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒற்றைகுழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு தொடர்பான தகராறு அதிபயங்கர கொலையில் முடிந்துவிட்டதே என்ற அதிர்ச்சியை விட கிராமத்து மக்களின் கைகளில் சகஜமாக புழங்கு கள்ளத்துப்பாக்கிகள் குறிந்த அச்சம்தான் இந்தச் சம்பவத்தால் மேலோங்கியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்