சூடு பிடிக்கும் உலகக்கோப்பை கால்பந்து - இன்று 2 போட்டிகள்.. வெற்றி யாருக்கு?

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின், மொராக்கோ உடன் மோதவுள்ளது. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மொராக்கோ, ஸ்பெயினுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என்பதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதேபோல், நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்