உலக கோப்பை கால்பந்து ஜப்பானிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி - 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த ஜெர்மனி

x

உலக கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. உலக கோப்பை க்ரூப் இ பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.

ஆட்டத்தில் முதல் பாதியிலேயே ஜெர்மனி கோல் அடித்து முன்னிலை பெற்றாலும், இரண்டாம் பாதியில் ஜப்பான், 75 வது நிமிடத்திலும், 83வது நிமிடத்திலும் கோல் அடித்து, ஆட்டத்தை தனது பக்கம் திருப்பியது.

இதன்பின்னர் கோல் அடிக்க முடியாமல் ஜெர்மனி தோல்வியடைந்தது.

முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனியை, ஜப்பான் வீழ்த்தியிருப்பது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்