ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர்- பேட்டி அளிக்க மறுத்த ஈரான் அதிபர்

x

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

அப்போது அவரிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது.

ஈரான் அதிபரிடம் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் அதிபர் ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார்.

மேலும், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பான புகைப்படத்தை கிறிஸ்டினா தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்