புலிக்கு அருகில் புகைப்படம் எடுக்கச் சென்றவர்களுக்கு "கிலி"... குச்சியை வைத்து சீண்டியதால் கடுப்பான புலி

x

புலிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற 2 இளைஞர்கள், புலி உறுமியதும் தலைதெறிக்க ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன... புலியின் முன்னால் ஒருவர் குச்சியைக் காட்டி வெறுப்பேற்றவே... கடுப்பான புலி திரும்பி சீற... அவ்வளவு தான்... அருகில் அமர்ந்திருந்த இருவரும் துண்டைக் காணோம்... துணியைக் காணோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்... அவர்கள் இருவரும் தலைதெறிக்க ஓடுவதை அந்தப் புலி ஆசுவாசமாக கண்டு ரசித்தது... இந்த வீடியோ இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக வைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்