வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் - 26 பேர் உயிரிழப்பு

x

கேரளாவில், பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, இந்த மாதத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் பருவ மழைக்காலம் என்பதால், டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக, மலப்புரம் மாவட்டத்தில் 13 வயது சிறுவன் உள்பட இருவர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. இதில், டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர், எலிக்காய்ச்சலுக்கு 10 பேர், மஞ்சள் காய்ச்சலுக்கு இரண்டு பேர், சாதாரண காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தனர். இதனிடையே, காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்