காய்கறிகளை அனுப்பி வைப்பதாக கூறி ரூ.1 கோடி அபேஸ்...பணத்தை திருப்பி அனுப்பியதாக போலி ரசீது - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

x

அரியானா மாநிலத்தில் இயங்கி வரும் காய்கறி வியாபாரம் செய்யும் நிறுவனத்திடம் பண மோசடி செய்து, குற்றவாளிகள் வாங்கிய டிராவல் வேன் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சீதாராமன் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜ் என்பவரும் அரியானாவில் உள்ள காய்கறிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இதில், நிறுவனத்துக்கு காய்கறிகளை அனுப்பி வைப்பதற்காக ஒரு கோடியே 80 லட்சம் பணம் பெற்ற சீதாரமன், காய்கறிகளை அனுப்பாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, 10 லட்ச ரூபாயை நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பிய சீதாரமன், மீதமுள்ள 1 கோடியே 70 லட்ச ரூபாயை செலுத்திவிட்டதாக போலி ரசீது மூலம் கணக்கு காட்டியுள்ளார். இதே போல் திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜீம் லட்சக்கணக்கில் மோசடி ஈடுபட்டது தெரியவர போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதில், சீதாராமன், சரண்ராஜ் உட்பட மூவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், நிறுவனத்திடம் மோசடி செய்த பணத்தில் வாங்கிய டிராவல் வேன் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்