"அவசர உதவிக்கு ஆட்டோ கூட வருவதில்லை" -"சாலை அமைத்து தாருங்கள்" - கிராம மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

x

"அவசர உதவிக்கு ஆட்டோ கூட வருவதில்லை" -"சாலை அமைத்து தாருங்கள்" - கிராம மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ள கொரலூர் கிராமத்தில், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கிராமத்தில் இருளர் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 500 பேர் வசித்து வருகிறார்கள்.

தங்கள் ஊருக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவசர மருத்துவ உதவிக்கு ஆட்டோ கூட வருவதில்லை என்று அந்த கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்.


Next Story

மேலும் செய்திகள்