200 கிலோ கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய ஈபிஎஸ்

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது 69வது பிறந்தநாளை, 200 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஈபிஎஸ்ஸின் இல்லத்துக்கு, ஏராளமான அதிமுகவினர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, தொண்டர்கள் கொண்டுவந்த 200 கிலோ கேக்கை வெட்டிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். இதன்பின்னர், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்