நடுவானில் நிலைகுலைந்த பயிற்சியாளர்... ஜோக் அடிப்பதாக நினைத்த பைலட் - தரையிறங்கியதும் காத்திருந்த அதிர்ச்சி

x
  • விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் நகைச்சுவை செய்து விளையாடுவதாக நினைத்துக் கொண்டு விமானி விமானத்தை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் உள்ள ப்ளாக்பூல் விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் என்ற பி.ஏ.-28-161 என்ற விமானம் புறப்பட்டது.
  • 57 வயது விமான பயிற்சியாளர் ஒருவரை அழைத்து கொண்டு விமானி புறப்பட்டுள்ளார்.
  • விமானம் வானில் பறக்கும் போது திடீரென பயிற்சியாளர் நிலைகுலையவே, அவர் விளையாட்டுக்கு நடிப்பதாக நினைத்துக் கொண்டு விமானத்தை ஓட்டியுள்ளார்.
  • விமானம் தரையிறங்கிய போது தான் பயிற்சியாளர் உயிரிழந்ததை அறிந்து கொண்டார் விமானி.
  • பிரேத பரிசோதனையில் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்