மத்திய அமைச்சர் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு!!

x

அசாமில் மத்திய இணை அமைச்சருடன் புறப்பட்ட இண்டிகோ விமானத் தில், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. கவுஹாத்தியில் இருந்து திப்ருகார் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் மீண்டும் கவுஹாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. அதற்கு முன்பு 20 நிமிடங்கள் விமானம் வானில் பறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்