மீண்டும் அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்

x

ட்விட்டர் பயனாளர்கள் ஒரு நாளில் எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்ற அறிவிப்பில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். அதன்படி வெரிஃபைடு பயனாளர்கள் 6 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு அல்லாத பயனாளர்கள் 600 பதிவுகளையும், புதிய பயனாளர்கள் 300 பதிவுகளையும் பார்க்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை முறையே, 8 ஆயிரம், 800, 400 என மாற்றப்பட்டது. இது தற்போது 10 ஆயிரம், ஆயிரம், 500 என மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ட்வீட்களை பார்வையிடுவதற்கான நிபந்தனையால் ட்வீட்டெக் சேவை முடங்கியதால், அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்