25 ஆண்டுகளுக்கு பின் பழங்குடி கிராமத்திற்கு மின் இணைப்பு - தந்தி டிவி செய்தி எதிரொலி

x

குன்னூர் அருகே 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக, டிவிட்டரில் தந்தி டிவி செய்திக்கு மின்சார வாரியம் பதிலளித்துள்ளது. குரங்குமேடு கிராமத்தில், மின் இணைப்பு வழங்க‌க்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மின்கம்பங்கள் மட்டும் அமைக்கப்பட்ட‌து. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த‌து குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் இணைப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கியுள்ளது. இதுகுறித்த தந்தி டிவியின் டிவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், குரங்குமேடு கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்