டென்னிஸ் போட்டிகளில் எட்டு முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆன்ட்ரே அகாசி பிறந்த தினம் இன்று

x

1970 ஏப்ரலில், அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் பிறந்த ஆன்ட்ரே அகாசி, இளம் வயதிலேயே டென்னிஸில் ஆர்வம் காட்டினார்.

ஈரானை பூர்வீகமாக கொண்ட அவரின் தந்தை, அவருக்கு டென்னிஸ் பயிற்சி அளித்து, ஊக்குவித்தார்.

12 வயதில் சிறுவர்களுக்கான தேசிய இரட்டையர் கோப்பையை வென்று சாதனை படைத்தார். 13 வயதில் புளோரிடாவில் உள்ள டென்னிஸ் பயிற்சி மையத்திற்கு அனுப்பட்ட அகாசி, 16 வயது முதல் முழு நேர டென்னிஸ் விளையாட்டு வீராக உருவெடுத்தார்.

1987இல் அமெரிக்கன் ஏ.டி.பி ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று, தர வரிசையில் உலக அளவில் 25ஆம் இடத்திற்கு முன்னெறினார்.

1988இல் 6 போட்டிகள் வென்று, மொத்தம் 10 லட்சம் டாலர் பரிசு தொகை ஈட்டினார். தர வரிசையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறினார்.

1992இல் விம்பிள்டென் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று, தனது முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை வென்றார். முன்னாள் உலக சேம்பியன்கள் போரிஸ் பெக்கர் மற்றும் ஜான் மெக்கென்ரோவை வென்று பெரும் புகழ் பெற்றார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் இடத்திற்கு பீட் சாம்ராஸுடன் தொடர்ந்து மோதினார். இருவரின் போட்டி டென்னிஸ் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

1995இல் உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த அகாசி, அடுத்த 30 வாரங்களுக்கு முதல் இடத்தை தக்க வைத்தார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

1999இல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்று, நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும் வென்ற ஐந்தாவது டென்னிஸ் வீரராக வரலாற்றில் இடம் பெற்றார்.

மொத்தம் எட்டு முறை கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்ற அகாசி, ஏழு முறை இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்தார்.

தண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளினால், தொடர்ந்து விளையாட முடியாமல், 2006இல் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மொத்தம் 3 கோடி டாலர் பரிசு தொகை வென்ற அகாசி, பின்னர் சமூக சேவைகளில் ஈடுட தொடங்கினார்.

டென்னிஸ் வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள ஆன்ட்ரே அகாசி பிறந்த தினம், 1970, ஏப்ரல் 29.


Next Story

மேலும் செய்திகள்