போதை பொருள் கடத்தல் கும்பலில் பெண்கள் - சிக்கிய 150 பேர்... அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல் - சூடுபிடித்த போலீஸ் விசாரணை..

x

கேரளாவில் உயர் ரக போதை பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கியவர்களில், பெரும்பாலானோர் 17 முதல் 25 வயதுடையவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் எம்டிஎம்ஏ எனப்படும் உயர் ரக போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்த விசாரணை சூடுபிடித்துள்ளது.

கலால் துறையினரின் தீவிர விசாரணையில், 5 இளம் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும், பெரும்பாலானோர் 17 முதல் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளன.

இதில், பெரும்பாலானோர் திருச்சூரை சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்ட அருண் என்பவர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் கலால் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்