மக்களின் BP-யை குறைத்த தக்காளி... கோயம்பேட்டில் எவ்ளோ தெரியுமா..?

x

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் வரை குறைந்து 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது..

14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது...

நேற்று 170 முதல் 290 ரூபாய் வரை விற்ற இஞ்சி, இன்று 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் நேற்று 100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 70 ரூபாயாக விலை குறைந்துள்ளது...

150 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும்,

50 ரூபாய்க்கு நேற்று விற்ற கேரட் இன்று 25 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் உருளைக் கிழங்கு 16 ரூபாய்க்கும், பீட்ரூட், மாங்காய், அவரைக்காய் 30 ரூபாய்க்கும், கத்தரி 40 ரூபாய்க்கும், பாகற்காய், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், வெண்டை, கேரட் 45 ரூபாய்க்கும், எலுமிச்சை 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்