"உன் லவ் உண்மைனா இத பண்ணு..." - மாணவிக்கு காதலன் வைத்த குரூர டெஸ்ட்

x

கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்ததால் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிமலையாறு தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்தால் வாமனபுரம், கல்லடா, அச்சன்கோவில், பம்பை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பெய்த மழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. நேற்று சாவக்காடு கடலில் காணாமல் போன இரு மீனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்