திமுக எம்.எல்.ஏ.வின் கார் டயர் வெடித்து விபத்து..எதிரே வந்த வாகனத்தில் மோதியதால் அதிர்ச்சி

x

எதிர்பாராவிதமாக மானாமதுரை எம்.எல்.ஏவின் கார் மோதியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

திமுகவை சேர்ந்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி. இவர் மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நல்லாகுளம் என்ற பகுதியில் காரின் டயர் வெடித்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படமாத்தூரை சேர்ந்த பாலு, ராஜேஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர்.இதுகுறித்து பூவந்தி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்