அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை..? - வெளியான தகவல்

திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நாளை அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை 2வது முறையாக மாற்றியமைக்கப்படுகிறது. ஏற்கனவே, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ராஜகண்ணப்பனிடமும் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, நாளை காலை 9.30 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்