கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அடம்பிடிக்கும் ஜோகோவிச்

x

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளிக்கவில்லை என முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கூறி உள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக பேசிய ஜோகோவிச், தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தான் எடுத்த முடிவு என்றும், இதனால் ஏற்பட்ட விளைவுகளை தான் ஏற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்