களைகட்டும் தீபாவளி... நரகாசூரனை தீ வைத்து கொளுத்தி கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

x

தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக நரகாசூரனை தீ வைத்து அழிக்கும் நிகழ்வு கோவாவில் நடைபெற்றது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவாவில் உள்ள பனாஜி பகுதியில், பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட நரகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

தீமையின் உருவான நரகாசூரனை தீ வைத்து எரிக்கும் நிகழ்வை, அங்கு கூடியிருந்தோர் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்