ஸ்ட்ரா போடாமலே உறிஞ்செடுக்கும் சூரியன்..100 டிகிரி வெயிலை தாண்டிய மாவட்டங்கள்

x

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.


தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வேலூரில் 105 புள்ளி இரண்டு ஆறு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதே போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 புள்ளி 4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மீனம்பாக்கத்தில் 103 புள்ளி ஒன்று பூஜ்யம் டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடலூரில் 101 புள்ளி ஒன்று இரண்டு, ஈரோட்டில் 100 புள்ளி நான்கு பூஜ்யம், கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் 102 புள்ளி இரண்டு பூஜ்யம், நாகையில் 100 புள்ளி இரண்டு இரண்டு,

பாளையங்கோட்டையில் 102 புள்ளி ஐந்து ஆறு

டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சேலத்தில் 100 புள்ளி ஏழு ஆறு, தஞ்சையில் 100 புள்ளி நான்கு பூஜ்யம்,

திருப்பத்தூரில் 100 புள்ளி நான்கு பூஜ்யம், திருச்சியில் 102 புள்ளி ஏழு ஐந்து, திருத்தணியில் 104 புள்ளி ஏழு இரண்டு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்