மணல் கடத்தல் கும்பலுடன் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு | விஏஓ உதவியாளர் மகன்களுக்கு நடந்த விபரீதம்

x

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் மற்றும் அரசு. இவர்கள் அந்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கஸ்தூரி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்புக்கும் இடையே பணம் தொடர்பாக பிரச்சினை எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கஸ்தூரியின் மகன்கள் இருவரும் மணல் கடத்தல் கும்பலை தாக்கி உள்ளனர். இதில் அரசு மற்றும் அஜித் ஆகிய 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. அதேபோல் இவர்கள் தாக்கியதில் மணல் கடத்தல் கும்பலின் மண்டை உடைந்தது. பாதிக்கப்பட்ட 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து விஏஓ உதவியாளர் பணம் பெறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்