தந்தி டிவியில் செய்தியை பார்த்ததும் ரஜினிமுருகன் பட நடிகர் குடும்பத்திற்கு ஓடிச்சென்று உதவிய இசையமைப்பாளர் டி.இமான்

x
  • தந்தி டிவி செய்தி எதிரொலியாக, ரஜினி முருகன் படத்தில் நடித்த பவுன்ராஜ் குடும்பத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
  • நடிகர் பவுன்ராஜின் மனைவி விக்னேஷ்வரி தந்தி டிவிக்கு கடந்த மாதம் அளித்த பேட்டியில், வறுமையால் வாடுவதாகவும், எந்த நடிகர்களும், நடிகர் சங்கமும் உதவி செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்திருந்தார்.
  • இதைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், தண்டையார்பேட்டையில் உள்ள பவுன்ராஜ் வீட்டுக்கு சென்று, உதவிப் பொருட்களை வழங்கினார்.
  • மேலும், சுயதொழில் செய்து வாழ்வாதாரம் பெருக்க, மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுத்து, கடைக்கும் ஏற்பாடு செய்து டி.இமான் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்