இங்கிலாந்து சென்றாரா நித்யானந்தா?

இங்கிலாந்து அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா பங்கேற்றாரா என கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாக மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
x

இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பாப் பிளாக் மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கும் ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகியோர் நித்யானந்தாவிற்கு தீபாவளி விருந்துக்காக அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இதை ஏற்று நித்தியானந்தா பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நித்தியானந்தா சார்பில், இங்கிலாந்து பிரதிநிதியான நித்திய ஆத்மதயானந்தா என்பவர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், நித்தியானந்தாவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ரமிந்தர் சிங் ரேஞ்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்