பூஜ்யத்தில் தொடங்கி ராஜ்யத்தை அமைத்தவர் தோனி - சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சி

x

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாள் முன்னாள் கேப்டன் தோனி அறிமுகமானதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு இதே நாள் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக தோனி களமிறங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் தோனி ஆட்டமிழந்தார். எனினும் அதன்பிறகு பல்வேறு சாதனைகளைப் புரிந்து தலைசிறந்த கேப்டனாக தோனி வரலாறு படைத்தார். பூஜ்யத்தில் தொடங்கி தனக்கென தனி ராஜ்யத்தை கிரிக்கெட்டில் தோனி உருவாக்கிய நிலையில், தோனி அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்