மகனுக்காக இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா

x

மகனுக்காக இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா


நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பரஸ்பரம் பிரிந்து வாழும் நிலையில், தனது மூத்த மகனின் பள்ளி விழாவிற்காக இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் பிரிந்து வாழும் நிலையிலும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை... இத்தம்பதியின் மூத்த மகன், யாத்ரா அவரது பள்ளியில் விளையாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். யாத்ரவுக்காக இருவரும் பங்கேற்று மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. உடன் பாடகர் விஜய் ஏசுதாசின் குடும்பத்தினரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்