"பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை நிறுத்த வேண்டும்" - திமுக கடிதம்

x

இதுகுறித்து சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவரும், திமுக எம்.பி.யுமான வில்சன், சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பொது சிவில் சட்டம் தொடர்பாக, 21-வது சட்ட ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அதை பரிசீலிக்காமல் 22-ஆவது சட்ட ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்பது தேவையற்ற ஒன்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம், கருத்து கேட்பு மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்