செய்தி வாசிப்பாளர் மரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

x

செய்தி வாசிப்பாளர் மரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயண்சாமி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் சரோஜ் நாராயண்சாமி மறைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து சரோஜ் நாராயண்சாமியின் குரல் நின்றுவிட்டது என கூறியுள்ளார். சரோஜ் நாராயண் குரல் நின்றதை அறிந்து மிகுந்த வேதனை அடைவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்