வேலை பார்த்த கடை ஓனருக்கே வெட்டு - சிலைகளை திருடி உரிமையாளரிடமே விற்ற பலே ஆசாமி..!

x

சென்னை மயிலாப்பூரில், தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான உலோக சிலைகள் விற்பனை கடையில், ராணிப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். கடைக்குத் தேவையான சிலைகளை வாங்கி வருவதே சண்முகத்தின் வேலையாக இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக கடையில் இருந்த சிலைகளின் எண்ணிக்கை குறைவதைக் கண்டு சந்தேகம் அடைந்த தியாகராஜன், திடீரென சண்முகம் தங்கி இருக்கும் அறைக்கு சென்று சோதனை செய்துள்ளார். அப்போது, 9 பித்தளை சிலைகள் அங்கு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் சண்முகத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 சிலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிலைகளை திருடி தன்னுடைய அறையில் வைத்திருந்ததும், மீண்டும் கடைக்காக சிலைகளை வாங்கச் செல்லும்போது, அந்த சிலைகளை முதலாளியிடமே விற்று வந்ததும் தெரியவந்தது. கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் அளவிற்கு சிலைகளை சண்முகம் திருடியிருப்பதாக, கடை உரிமையாளர் தியாகராஜன் புகார் அளித்திருப்பதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்