"தோனி-ய நேர்ல பாக்க போறோம், இது லைஃப் டைம் செட்டில்மென்ட்" - CSG போட்டியில் வென்றவர்கள் நெகிழ்ச்சி

x

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான 6வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தமிழக கிரிக்கெட் ரசிகர்ளுக்காக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான 6வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, டிக்கெட் பரிசு போட்டி நடத்தப்பட்டது.

கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்ககத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் சரியான பதில் அளித்த 13 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 12 பேருக்கு தலா 2 டிக்கெட்டுகளும், ஒருவருக்கு ஒரு டிக்கெட் என மொத்தம் 25 டிக்கெட்டுகள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்