"இது சின்ன பிரச்சனை தான" என சொன்ன அதிகாரியை ஆக்ரோஷமாக தள்ளிவிட்ட மக்கள் - நாகப்பட்டினத்தில் பரபரப்பு

x
  • நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் சென்ற எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்
  • நாகூர் அடுத்துள்ள பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.
  • பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கச்சா எண்ணெய், பனங்குடி ஆலையில் இருந்து, பைப் லைன் வழியாக காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • இந்நிலையில், இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடல் முழுவதும் பரவியது.
  • இதனால், மீனவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதோடு, மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
  • எனவே, பைப் லைனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்