உலகின் 2ஆம் அதிவேக வீரர் 89 போட்டிகள்.. 3000 ரன்கள் .. 450 விக்கெட் அனில் கும்ப்ளேவின் சாதனையை உடைத்த அஸ்வின்

x

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஷ்வின், சர்வதேச போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

89 போட்டிகளிலேயே இதை செய்ததன் மூலம், அனில் கும்ப்ளேவின் சாதனையை மிஞ்சியுள்ளார்.

அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 3வது வீரர் என்ற சாதனையையும் அஷ்வின் படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்