வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் - 3 நாள் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

காட்டுமன்னார்கோவில் அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள், மூன்று நாட்களுக்கு பிறகு திரும்ப வந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ஓமாம்புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம், இரண்டு காளை மாடுகளை, பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. 2 லட்சம் கன அடி நீர் வெளியேறும் ஆற்றை கடந்து மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

குடும்பமே மனஉளைச்சலில் இருந்த நேரத்தில், மூன்று நாட்களுக்கு பிறகு இரண்டு மாடுகளும் உயிருடன் திரும்பி வந்தன. மாடுகளை ஆரத்தழுவி, ஆரத்தி எடுத்து ஆரவாரமாக வரவேற்ற சுப்பிரமணியன் குடும்பத்தினர், கருப்பசாமி சிலைக்கு சூடம் ஏற்றி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்