இறந்த குழந்தையை சொந்த இடத்தில் புதைத்த தம்பதி -தோண்டி எடுத்து இடுகாட்டில் அடக்கம் செய்த அதிகாரிகள்

x

செங்குன்றம் அருகே, சொந்த இடத்தில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை அதிகாரிகள் தோண்டி எடுத்து, இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த காவாங்கரையை சேர்ந்த மாரி- பவானி தம்பதிக்கு சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கடந்த 11-ஆம் தேதி பெண் குழந்தை இறந்தே பிறந்தது.

அந்த சிசுவின் சடலத்தை மாரி குடும்பத்தினர் தங்கள் சொந்த இடத்தில் புதைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், அந்த சிசுவின் சடலம், ஊராட்சியில் உள்ள இடுகாட்டில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்