கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்
x

ஹரியானா மாநிலங்களவை தேர்தலில் மாற்றி வாக்களித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் பிஷ்னோய், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஹரியானா மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய், அக்கட்சி வேட்பாளர் அஜய் மக்கானுக்கு வாக்களிக்காமல், பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவளித்த வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் அஜய் மாக்கான் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் தற்போதைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் குல்தீப் பிஷ்னாய் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்