திரவுபதி அம்மன் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக புகார்

x

விழுப்புரம் அருகே கோயிலில் நுழைந்த பட்டியலினத்தவர்களை தாக்கியதாகக் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், கோயிலில் சாமி கும்பிட நுழைந்த போது அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்