மனைவியை கள்ள துப்பாக்கியால் சுட்டதாக புகார்... கணவரை கைது செய்து போலீசார் விசாரணை

x

ஆம்பூரை அடுத்த மாச்சம் பட்டு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக 2 கள்ளத்துப்பாக்கிகளை நிலத்தில் பதுக்கி வைத்துள்ளார்.

அவற்றை சிலம்பரசன் எடுக்க முயன்ற போது கை பட்டு துப்பாக்கி குண்டு அருகில் இருந்த அவரது மனைவி மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சிலம்பரசனின் மனைவி கஸ்தூரி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மனைவியை சுட்டதாக சிலம்பரசனை கைது செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த 2 கள்ள துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்