கல்லூரி மாணவர்கள் படுகாயம்... யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சியில் சோகம்

x

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் பலர் முண்டியடித்து செல்ல முயன்றதால், 3 மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா கார் உள்ளே சென்ற போது, காரை ஏராளமானோர் துரத்தி சென்றதாகவும், தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினாவை கீழூ தள்ளி மிதித்தபடி மாணவர்கள் உள்ளே ஓடியதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அவருடன் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்