பணம் பெற்று கொண்டு சீட் வழங்கப்படுவதாக புகார் - தன் மகளுக்கு சீட் கிடைக்காததால் தாய் வேதனை

x

பணம் பெற்று கொண்டு சீட் வழங்கப்படுவதாக புகார் - தன் மகளுக்கு சீட் கிடைக்காததால் தாய் வேதனை

விழுப்புரத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கலை கல்லூரியில், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் படிக்க அருகிலுள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த மாணவி பிரவீணா விண்ணப்பித்து, இடம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவி இவரை விட குறைவான மதிப்பெண் பெற்ற நிலையில் அவருக்கு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாவின் தாய் தமிழ்செல்வி கல்லூரி முதல்வரை சந்திக்க கல்லூரி வருகையில், முதல்வர் இல்லாததால் மனமுடைந்துள்ளார். பின்பு கல்லூரியில் பணம் பெற்றுக் கொண்டு சீட் வழங்கப்படுவதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதால் பரபரப்பானது. இதற்கு முன் இவ்விவகாரத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்