கைது பண்ணிடுவாங்க என்ற அச்சத்தில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி

x

திருவேற்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீநிதி, இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஸ்ரீநிதியின் பெற்றோர் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடத்தில், 7 பவுன் நகையை பெற்றதாக தெரிகிறது. ஆனால் இரண்டு பவுன் நகைகள் மட்டுமே பெற்றதாக ஸ்ரீநிதியின் பெற்றோர் தெரிவித்ததையடுத்து, வீட்டின் உரிமையாளர் இதுக்குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து ஸ்ரீநிதியின் பெற்றோரிடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், தனது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி ஸ்ரீநிதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்