"கலெக்டர் மாமா" செல்லமாக பேசி பிளையிங் கிஸ் கொடுத்த குழந்தை.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ

x

"கலெக்டர் மாமா" செல்லமாக பேசி பிளையிங் கிஸ் கொடுத்த குழந்தை.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ


கேரளாவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் ஒரு சிறுவனின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்...

கேரளாவில் தொடர் மழையால் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது... ஆலப்புழா ஆட்சியராக ஆகஸ்ட் 3ம் தேதி கிருஷ்ண தேஜா பொறுப்பேற்றவுடன் அவர் போட்ட முதல் உத்தரவே பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தான்... இது குறித்து அவரது முக நூல் பதிவில், "குழந்தைகளே... உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல் ஆர்டராக விடுமுறை அறிவித்துள்ளேன்... தண்ணீரில் விளையாடாமல் சமத்துப் பிள்ளைகளாக படிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டதில் இருந்து கிருஷ்ண தேஜா குழந்தைகள் மத்தியில் ஹீரோவாகி விட்டார்... அதிலும் எலி காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து அவர் அடிக்கடி முகநூலில் குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டும் வருகிறார்... ஆட்சியர் கிருஷ்ண தேஜாவின் மீதான அன்பால், குழந்தை ஒன்று அவருக்கு வீடியோ அனுப்பி உள்ளது... அதில், ஆட்சியரை "கலெக்டர் மாமா" என்று செல்லமாக அழைக்கும் அந்த சுட்டிக் குழந்தை... தான் வீட்டுக்கு வந்ததும் சோப்பு போட்டு கை கழுவுவதாக மழலை மொழியில் பேசி இருப்பது ஆட்சியரை வெகுவாகக் கவர்ந்து விட்டது... வீடியோவை கிருஷ்ண தேஜா பகிர்ந்துள்ளார்... "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் மீனா நடிகர் ரஜினியை "ரஜினி அங்கிள்...ரஜினி அங்கிள்" என்று வாய் நிறைய கூப்பிடுவதைப் போல சிறுவன் மழலை மொழியில் "கலெக்டர் மாமா...கலெக்டர் மாமா..." என்று செல்லமாக அழைப்பது அனைவரையும் கவர்ந்து விட்டது.


Next Story

மேலும் செய்திகள்