இலங்கையில் சீன ராணுவம் ஆதிக்கம்.. தமிழக கடலோர காவல் படைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

x

இலங்கையில் சீன ராணுவம் ஆதிக்கம்.. தமிழக கடலோர காவல்படைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் சீன ராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தமிழக கடலோர காவல் படையினர் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உளவு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சீன உளவு கப்பல் இலங்கை பகுதிக்கு வரவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே, சீன ராணுவ வீரர்கள் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதால், தமிழக கடலோர காவல் படையினர் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அதிநவீன கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவை சோதனை செய்து வருவதாக, மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.


Next Story

மேலும் செய்திகள்