சென்னையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

x

சென்னை திருவல்லிக்கேணியில் N.K.T. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் சுற்றுச்சுவர் சுமார் 15 அடி நீளம் 70 அடி அகலத்திற்கு இடிந்து விழுந்துள்ளது.

இதில் நிர்மலா என்ற பெண்ணுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவர் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல சுரேஷ் என்பவருக்கு தலை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் அப்பளம் போல் விழுந்து நொறுங்கின.


Next Story

மேலும் செய்திகள்