20 ஆண்டுகளுக்கு முன்பே அதிரடி ஆக்‌ஷன் - முன்னாள் டிஜிபி விஜயகுமார்

x

20 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை போலீஸ் சைபர் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததாக முன்னாள் டிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் பிரகாஷ் வழக்கு குறித்து பேசினார்.

அப்போது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பிரகாஷ் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததால், அதை நிரூபிப்பதற்கு அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால், முழுமையான ஒத்துழைப்பு வழங்காமல் தகவல்களை தர மறுத்ததாகவும் கூறினார்.

மேலும், தற்காலிக தகவல் தொழில்நுட்ப வல்லுநரை வைத்தே அதனை கண்டுபிடித்து, தண்டனை வாங்கி கொடுத்தது சென்னை போலீஸ் தான் என பெருமிதத்துடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்