நாட்டின் தேவையை சமாளிக்க போதுமான அரிசி இருக்கா..?மத்திய அரசின் அறிக்கை என்ன சொல்லுது?

x
  • மத்திய அரசின் நெல் கொள்முதல் 700 லட்சம் மெட்ரிக்டன் அளவை தாண்டியுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • 2022-23 காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் மிகவும் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய உணவுத்துறை அமைச்சகம், கடந்த 20 ஆம் தேதி வரை 702 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதால், 96 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1 கோடி 45 லட்சத்து 845 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய தொகுப்பில், நாட்டின் தேவையை சமாளிப்பதற்கு போதுமான அரிசி இருப்பதாகவும் மத்திய உணவு அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்