ஏர்செல்-ஐ போலவே மாயமாய் மறைந்த செல்போன் டவர் - காவல் நிலையத்துக்கு வந்த வினோத புகார்

x

வடிவேல் பட பாணியில் கிணற்றைக் காணவில்லை என்பது போல், செல்போன் டவரைக் காணவில்லை என தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் அ.காளாப்பூரில், ராசு என்பவருக்கு சொந்தமான இடத்தில், 10 வருடம் குத்தகைக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில், ஏர்செல் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. அதன் பிறகு ஏர்செல் நிறுவன செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு செல்போன் டவரை பார்ப்பதற்கு சென்றபோது அங்கு டவர் இல்லாததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, தனியார் ஒப்பந்த நிறுவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் ராசு இறந்துவிட்டதால், ஏர்செல் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்களே செல்போன் டவரை கழற்றிச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்